தமிழகம்

சென்னையில் ஒரே நாளில் 47 போலீஸார் பணி ஓய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை காவல் துறையில் பணியாற்றி வந்த ஓர் உதவி ஆணையர், 2 காவல் ஆய்வாளர், 29 உதவி ஆய்வாளர்கள், 12 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சென்னை காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 47 பேர் பணி ஓய்வு பெற்றனர்.

அவர்களுக்கான பிரிவு உபசார விழா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி, துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணி ஓய்வு பெற்ற 47 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணிபுரிந்ததை பாராட்டியும், தமிழக காவல் துறைக்கும், சென்னை பெருநகர காவல் துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்தும், கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி சால்வை, மாலை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT