தமிழகம்

பயணத்தின்போது பைக்குகளில் என்னை பின்தொடர கூடாது: தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: ​பாது​காப்​புக் குழு​வினரின் வாக​னங்​களில் ஏறு​வது, குதிப்​பது, பயணத்​தின்​போது இருசக்கர வாக​னங்​களில் தலைக்​கவசமின்றி வேக​மாக பின் தொடர்​வது போன்ற செயல்​களில் தொண்​டர்​கள் ஈடு​படக் கூடாது என தமிழக வெற்​றிக் கழக தலைவர் விஜய் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கோவை​யில் நடை​பெற்ற கட்​சி​யின் பூத் கமிட்டி முகவர் கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள வந்த என்னை அன்​பால் நனைய வைத்​தீர்​கள். உண்​மை​யான மக்​களாட்​சி​யை​யும் உண்​மை​யான ஜனநாயக அதி​காரத்​தை​யும் மீட்​டுத் தரு​வது​தான் எனது அன்​புக் காணிக்​கை​யாக இருக்​கும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் இதை நிச்​ச​யம் நிறைவேற்​றிக் காட்​டு​வோம்.

இளைய தோழர்​கள், நமது வாக​னங்​களை இருசக்கர வாக​னங்​களில் தலைக் கவசமின்றி வேக​மாகப் பின்​தொடரு​வது, பாது​காப்​புக் குழு​வினரை மீறி வாக​னத்​தின் மீது ஏறு​வது, குதிப்​பது போன்ற செயல்​களில் ஈடு​பட்​டது எனக்கு மிக​வும் கவலையை அளித்​தன. உங்​களின் பாது​காப்​பு​தான் எனக்கு ரொம்ப முக்​கி​யம். உங்க அன்பை மதிக்​கிறேன். அதே​போல நீங்​களும் என்​மேல் அன்​போடு இருப்​பது உண்​மையென்​றால் இனி இது​போல செய்​யக்​கூ​டாது.

ஒழுங்கு நடவடிக்கை குழு: இந்நிலையில், தவெகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுஅமைத்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள நிர்வாகிகள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக கட்சியின் தலைவர் விஜய்யே செயல்படுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக, பொதுச் செயலாளர் என்.ஆனந்த், உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் சி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT