பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி உதகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தமிழகம்

அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து உதகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: அமைச்சர் பொன்முடி புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், பொன்முடியின் புகைப்படத்தை கொண்டு வந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் பால.நந்தகுமார், துணை செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

SCROLL FOR NEXT