தமிழகம்

‘தமிழகத்தின் வெற்றியை உரக்கச் சொல்வோம்’ - முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தின் வெற்றியை உரக்கச் சொல்வோம். லட்சியப் பயணத்தில் வெல்வோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில்முனைவோர் சுரேஷ் சம்பந்தம் என்பவர் தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 மாநிலமாக திகழ்வதாக அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்வர்,"தமிழகத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.

நமது வரலாறு நாளைய தலைமுறையை வடிவமைக்க வேண்டும். பொய்மைகளை உடைக்கவும், மெய்ப்பொருள் நாடுவோர்க்கும் மாற்றத்தைப் படைப்போர்க்கும் வழிகாட்டிடவும் உண்மையை உரக்கப் பேசித்தான் ஆக வேண்டும்.

தமிழகத்தின் வெற்றியை உரக்கச் சொல்வோம். லட்சியப் பயணத்தில் வெல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT