தமிழகம்

தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் - எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை 

செய்திப்பிரிவு

சென்னை: தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 270-ஆவது பிறந்த நாளான இன்று (17.4.2025 – வியாழக் கிழமை), சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, தீரன் சின்னமலை திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில்: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைப்படி, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும், அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்திற்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.ஏ. இராமலிங்கம், இராமலிங்கம், மாவட்டக் கழக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ராமசாமி, செல்வகுமார சின்னையன், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் கிட்டுசாமி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான மல்லிகா பரமசிவம், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மு. சதீஷ்குமார், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியக் கழகச் சதீஷ்குமார் செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியக் கழகச் கதிர்வேல், செயலாளர் குலவிளக்கு மு. செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, செல்வராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT