திருச்செந்தூர் கோயில் அருகே நேற்று கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள். 
தமிழகம்

திருச்செந்தூரில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியது: சீற்றம் அதிகரித்ததால் மக்கள் அச்சம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்திய, பிந்திய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முழுவதும் பவுர்ணமி இருந்தது. இதையடுத்து அன்றைய தினம் கடல் நீர் உள்வாங்கி இருந்தது. பின்னர் நேற்று காலையில் மீண்டும் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கடல் நீரானது சுமார் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னர் மாலையில் கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT