தமிழகம்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்: மன்னார்குடி ஜீயர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இந்து தர்மத்தை கேவலமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்னார்குடி செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் பொன்முடி இந்து தர்மத்தை கேவலமாகப் பேசியுள்ளார். இந்து தர்மத்தை தரக்குறைவாகப் பேசுகிறவர்கள், அமைச்சர் பதவியில் இருக்கின்றனர். தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால், சைவம், வைணவம், பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, அவரைக் கைது செய்ய வேண்டும்.

திருச்செந்தூர் முருகன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களில் தனி வரிசையில் தரிசனம் செய்ய, பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையில் முறைகேடு நடக்கிறது. குடமுழுக்கை தமிழில் மேற்கொள்வதில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT