கோடை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - மேற்குவங்கம் மாநிலம் ஷாலிமர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து ஏப்.7, 14, 21 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02841) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.9, 16, 23 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02842) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு ஷாலிமரை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.