தாம்பரத்தில் நேற்று தடம் புரண்ட சரக்கு ரயில். 
தமிழகம்

‘வீல் அலைன்மென்ட்’ சரியாக இல்லாததால் தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது

செய்திப்பிரிவு

தாம்பரம்: அரக்கோணத்தில் இருந்து கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் ஒன்று பராமரிப்புப் பணிக்காக, 3 வாரங்களுக்கு முன்பு தாம்பரம் யார்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பராமரிப்புப் பணி முடிந்து நேற்று இரவு 7.00 மணிக்கு அந்த ரயில் அரக்கோணத்துக்கு செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மெயின் லைனுக்கு இயக்கப்பட்டது.

அப்போது, 26 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலின் 5 பெட்டிகள் மெயின் லைனுக்குள் வந்த நிலையில் இடையில் இருந்த 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று தடம் புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘வீல் அலைன்மென்ட்’ சரியாக இல்லாததே, ரயில் தடம் புரண்டதற்குக் காரணம் என்று கூறப்படு கிறது. ரயில் தடம் புரண்டதால், எழும்பூரிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தொடர்ந்து, அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் திருப்பிவிடப் பட்டன. இதனால், தாம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT