தமிழகம்

“பாஜகவுடன் கூட்டு என பொய் பிரச்சாரம் செய்யும் திமுக!” - கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகள்

ச.கார்த்திகேயன்

இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு தமிழக அரசியலை மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா சொல்லி இருப்பது அவரது விருப்பம்” என்று நழுவியிருக்கிறார் இபிஎஸ்.

அப்​படி​யா​னால் பாஜக-வுடன் கூட்​டணி இல்​லையா என்று அதி​முக மூத்த நிர்​வாகி​கள் சிலரிடம் கேட்​டோம். இதற்கு பதில் சொன்ன முன்​னாள் அமைச்​சர் சி.பொன்​னையன், “அமித் ஷாவிடம் பழனி​சாமி கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாக மக்​கள் யாரும் சொல்​ல​வில்​லை. திமுக-​வினரும் பாஜக-​வினரும் அவர்​களின் ஆதரவு சமூக வலை​தளங்​களும் தான் பரப்பி வரு​கி​றார்​கள். மத்​தி​யில் யார் ஆட்​சி​யில் இருந்​தா​லும் தமி​ழ​கத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கு​வ​தில்​லை. நதிநீர் பங்​கீட்டை தீர்ப்​ப​தில்​லை. ஓரவஞ்​சனை தான் செய்​கின்​ற​னர்.

தமி​ழ​கத்​தில் மும்​மொழி கொள்கை பிரச்​சினை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்​சினை. சட்​டம் - ஒழுங்கு சீர்​கேடு என எத்​தனையோ பிரச்​சினை​கள் உள்​ளன. எதிர்க்​கட்​சித் தலை​வர் என்ற முறை​யில், பழனி​சாமி தமிழக மக்​களின் பிரச்​சினை​கள் குறித்து அமித் ஷாவை சந்​தித்து முறை​யிடு​வ​தில் எந்​தத் தவறும் இல்​லை.

அந்த உரிமை அவருக்கு இருக்​கிறது. இதை சகித்​துக்​கொள்ள முடி​யாதவர்​களே தவறான தகவலை பரப்​பு​கின்​ற​னர்” என்று சொன்​னார். அதி​முக மகளிரணி செய​லா​ளர் பா.வளர்​ம​தி​யோ, “தி​முக-​வினர், செயல்​படுத்​தவே முடி​யாத திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தாக பொய்​யைச் சொல்லி ஆட்​சிக்கு வந்​தவர்​கள். பாஜக-வுடன் அதி​முக கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​து​வ​தாக இவர்​கள் தான் பொய்​யான தகவலை பரப்பி வரு​கின்​ற​னர். திமுக என்​றாலே பொய் தான். சட்​டம் - ஒழுங்கு சீர்​கேடு, டாஸ்​மாக் ஊழல், மகளிருக்கு எதி​ரான பாலியல் வன்​கொடுமை​கள் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க இது​போன்று பரப்பி வரு​கின்​ற​னர்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் என்ற முறை​யில், மக்​கள் பிரச்​சினை குறித்து பேசத்​தான் அமித் ஷாவை சந்​தித்​தார் இபிஎஸ். யாருடன் கூட்​டணி வைத்​தா​லும் இறு​தி​யில் மக்​களைத் தான் சந்​திக்க வேண்​டும். அப்​படி இருக்க, கூட்​டணி குறித்து ரகசி​ய​மாக பேச வேண்​டிய அவசி​யம் அதி​முக-வுக்கு இல்​லை” என்று சொன்​னார்.

அதி​முக பொருளாள​ரான திண்​டுக்​கல் சீனி​வாசனிட​மும் பாஜக கூட்​ட​ணிக்கு தயா​ராகி​விட்​டீர்​களா என்ற கேள்​வியை முன்​வைத்​தோம். “இரு​வ​ரும் என்ன பேசி​னார்​கள் என்​பது குறித்​து, அந்த சந்​திப்​பில் பங்​கேற்​றவர்​கள் தான் சொல்ல முடி​யும்; அது தான் சரி​யாக இருக்​கும். கூட்​டணி குறித்து பேச​வில்லை என பழனி​சாமியே அழுத்​தம் திருத்​த​மாக தெரி​வித்​து​விட்​டார். அவர் சொன்​னது​தான் சரி​யான தகவல்” என்​றார் அவர்.

வழக்​கறிஞர் அணி செய​லா​ளர் ஐ.எஸ்​.இன்​பதுரை​யிடம் கேட்​டதற்​கு, “இந்தி திணிப்பு எதிர்ப்​பு, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு உள்​ளிட்ட மாநில உரிமை​களைக் காக்​கும் களம், ஏதோ தங்​களுக்கு மட்​டுமே உரித்​தானது போன்று திமுக தொடர்ந்து கட்​டமைத்து வரு​கிறது. அந்த பிம்​பத்​தை, தனது டெல்லி பயணத்​தின் மூலம் பழனி​சாமி தகர்த்​தெறிந்​து​விட்​டார். இதை ஏற்க முடி​யாதவர்​கள், பழனி​சாமி பாஜக-வுடன் கூட்​டணி குறித்து பேசி​விட்டு வந்​த​தாக தவறான தகவல்​களை பரப்பி வரு​கின்​ற​னர்” என்​றார் காட்​ட​மாக. இதற்கு மேல் இனி அமித் ஷாவே வந்​து, என்​ன பேசினோம்​ என உடைத்​துச்​ சொன்​னால்​ தான்​ உண்​டு!

SCROLL FOR NEXT