தமிழகம்

சென்னையில் தொழில்புரிவோர் உரிமம் பெற வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தொழில்புரிவோர் தொழில் உரிமம் பெற வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மாநகராட்சியின் அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் ஆணையர் அவர்களிடம் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். மேலும், விதி 290ன்படி புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, வணிகர்களின் கோரிக்கையையடுத்து தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதி 300Aன்படி தொழில் உரிமம் ஓராண்டு அல்லது இரண்டாண்டு அல்லது மூன்றாண்டு என தொழில் உரிமத்தினை அவரவர் விருப்பம் போல் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வணிகர்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வாயிலாகவும் (chennaicorporation.gov.in), இ-சேவை மையத்திலும், மண்டல அலுவலகங்களிலும் மற்றும் சம்மந்தப்பட்ட உரிமம் ஆய்வாளரிடம் கையடக்க கருவி மூலமாகவும் தொழில் உரிமத்தினை 31.03.2025க்குள் புதுப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SCROLL FOR NEXT