தமிழகம்

மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 20) சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலை (விரிவாக்கம் வீதி) பகுதியை சேர்ந்தவர் ராஜிக். இரும்பு கடை தொழில் செய்து வருகிறார். எஸ்டிபிஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், இன்று அவரது வீட்டில் அமலாக்கத் துறையை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சிஆர்பிஎஃப் போலீஸ் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்துள்ள ரீலா என்பவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக வெளியிடும் அறிக்கையின் முடிவில்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

SCROLL FOR NEXT