தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருத்தணியில் வரைவு ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர் 
தமிழகம்

தொழில்நுட்ப கோளாறால் திருத்தணி அருகே நடுவழியில் நின்ற விரைவு ரயில்

இரா.நாகராஜன்

திருத்தணி: திருத்தணி அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விரைவு ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

அரக்கோணம் சந்திப்பிலிருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை காலை 6:40 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் 7.10 மணி அளவில் திருத்தணி அருகே சென்றபோது திடீரென இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியிலேயே நின்றது.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து கடப்பா விரைவு ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை ஆய்வு செய்து, சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த பணியால் அந்த ரயிலில் பயணித்த வேலைக்கு, பள்ளிக்கு செல்வோர் சிலர் ரயிலில் இருந்து இறங்கி திருத்தணி பஸ் நிலையம் நடந்து சென்று பேருந்தில் பயணித்தனர். பின்னர் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணி முடிவடைந்து, 8.25 மணி அளவில், விரைவு ரயில் கடப்பா நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

SCROLL FOR NEXT