தமிழகம்

நாகையில் ரூ.82.99 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்; ரூ.200 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை​யில் மாவட்ட நிர்​வாகம் சார்​பில் ரூ.82.99 கோடி மதிப்​பில் பல்​வேறு திட்​டங்​களுக்கு நேற்று அடிக்​கல் நாட்​டி​, ரூ.139.92 கோடி மதிப்​பில் பல்​வேறு திட்​டப்பணி​களைத் தொடங்கி வைத்​து, 38,956 பயனாளி​களுக்கு ரூ.200.27 கோடி மதிப்​பில் நலத்​திட்ட உதவி​களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்​கி​னார்.

இவ்விழாவில் முதல்​வர் பேசி​ய​தாவது: நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியில் 450 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். பழமை வாய்ந்த நாகை நகராட்சி கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

ஹஜ் புனித இல்லம்: நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களில் வடிகால்கள், வாய்க்காலின் மதகுகள் ரூ.32 கோடியில் சீரமைக்கப்படும். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு சென்னை யில் ரூ.55 கோடியில் ஹஜ் புனித இல்லம் கட்டப்படும். மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறியதால், தமிழக கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறது மத்திய அரசு.

கண்கலங்க வைத்த சிறுமி: இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால் சிலரின் சமூக ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குதான். கடலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர், மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் என்ன? நான் தருகிறேன் என்று தன்னுடைய சேமிப்பு தொகை ரூ.10 ஆயிரத்தை காசோலையாக அனுப்பியது என்னை கண்கலங்க வைத்தது. இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு புரிவது கூட மத்திய அரசுக்கு புரியவில்லை. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே,பன்​னீர்​செல்​வம், அன்​பில் மகேஸ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிர​தி​நிதி ஏ.கே.எஸ்​.​விஜயன், தாட்கோ தலை​வர் மதி​வாணன், மீன் வளர்ச்​சிக் கழகத் தலை​வர் கவுதமன், நாகை எம்​.பி செல்​வ​ராஜ், நாகை மாவட்ட ஆட்​சி​யர்​ ஆகாஷ், எம்​எல்​ஏ முகம்​மது ஷாந​வாஸ்​ உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT