மதுரை: எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காக தேர்தல் ஆணையம் செயல்படும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று காலை மதுரை வந்தார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் தேர்தல் பணி தொடர்பாக அதிகாரிகளுடன ஆய்வு நடத்தினேன்.
18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மதுரையில் தேர்தல் பணிகளை அதிகாரிகள் சிறப்பாக செய்கின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் நலனுக்காக செயல்படும்.'' என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மதுரை கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.