தமிழகம்

ராமேசுவரம் மீனவர்கள் பிப். 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகளை சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகில் விசைப்படகு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இலங்கை சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் 2 ஆண்டுகள் வரையிலும் தண்டனை கைதிகளாக உள்ள 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT