தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் பொது அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை: மதுரை ஆட்சியர் விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் டிச. 4-ம் தேதி மலை மீதுள்ள தர்காவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்று புதிதாக அறிவிப்பு பலகை தர்கா மேனேஜிங் டிரஸ்டியினரால் வைக்கப்பட்டுள்ளதாக கோயில் மூலம் திருப்பரங்குன்றம் போலீஸில் புகார் அளித்ததன்படி அந்த வாசகம் நீக்கப்பட்டது.

டிச. 25-ல் ஆடு பலி கொடுக்க 5 நபர்கள் மலை ஏற சென்றபோது பணியிலிருந்த போலீஸார் தடுத்ததால், கந்தூரி கொடுக்க அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருமங்கலம் கோட்டாட்சியரின் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இரு தரப்பினரும் அடுத்தடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 11 நபர்கள் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளி நபர்கள் வழிபாட்டு முறைகளில் தலையிட அனுமதிக்க மாட்டோம் என எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.

வெளியூரை சேர்ந்த இரு தரப்பை சேர்ந்த அமைப்பினர் அப்பகுதி மக்களுடைய பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேணவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT