தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இவரது பதவி காலம் முடிந்துவிட்ட நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால் அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் நேற்று மாலை 5.33 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. 5-ம் தேதி மாலை 4.20 மணிக்கு டெல்லியில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புவார் என்பது குறிப்பிடத்தகக்து.