சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செவித்திறன் – கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3-வது தேசிய கருத்தரங்கில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கருடன் கலந்து கொண்டார். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.லட்சுமண், திருச்சி சிவா, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் நசிகேத ரவுத், செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் சமீர் தாலே ஆகியோர் உடனிருந்தனர். 
தமிழகம்

மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது: குடியரசு துணைத் தலைவர் பேச்சு

செய்திப்பிரிவு

சென்னை: ​மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரி​வித்​துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டுத் துறை அமைச்​சகத்​தின் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டு நிறு​வனம், செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களால் டெல்​லி​யில் நடத்​தப்​பட்டு வரும் எஸ்இடிபி தொண்டு நிறு​வனம், சென்னை சேடனா அறக்​கட்டளை மற்றும் வித்​யாசாகர் நிறு​வனம் சார்​பில், செவித்​திறன் - கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களுக்கான 3-வது தேசிய மாநாடு சென்னை முட்டுக்​காட்​டில் நேற்று நடைபெற்​றது.

மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்​தார். எஸ்இடிபி நிறு​வனத்​தின் இயக்​குநர் சமீர் தாலே வரவேற்​புரை வழங்​கினார். நிகழ்ச்​சி​யில் மாற்றுத் திறனாளி​களுக்கான உதவி உபகரணங்கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ் உதவி உபகரணங்களை குடியரசு துணைத் தலைவர் வழங்கி, அவர்​களுடன் சைகை மொழி​யில் கலந்​துரை​யாடி​னார்.

பின்னர் மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: இன்றைக்கு மாற்றுத் திறனாளி​களுடன் இருப்பதை ஆசீர்​வாத​மாகக் கருதுகிறேன். செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி​களுக்கான கல்வி மற்றும் வேலை​வாய்ப்பு என்பது மிகவும் முக்​கி​யம். ஏராளமான திறன்களைக் கொண்ட மாற்றுத்திறனாளி​களால் இன்றியமையாத பங்களிப்பை தேசத்​துக்கு வழங்க முடி​யும். அதற்கு அவர்களை கைப்​பிடித்து தூக்​கி​விட்​டால் மட்டுமே போதும்.

மாற்றுத் திறனாளி​களின் திறன்​களைக் கண்டறிந்து, அவர்​களின் கனவுகளை நனவாக்​கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்​படுத்தி வருகிறது. இவற்றை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி​யுடன் இருக்கிறார். அனைவரை​யும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பும் அவசி​யம். அவர்​களது பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்​துக்கான இலக்கை அடைய முடி​யாது. எனவே மாற்றுத் திறனாளி​களின் தேவைகளை சமுதா​யத்​தில் யாரும் ஒதுக்​கி​விடக் கூடாது.

வாழ்​வில் பல்வேறு இக்கட்டான சூழல்களை திறம்பட கையாளும் அவர்​கள், பாரா ஒலிம்​பிக்​கிலும் பல்வேறு சாதனை​களைப் படைத்து வருகின்​றனர். அந்த வகையில் செயற்கை நுண்​ணறிவு போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களுடன் கூடிய வளர்ச்​சிப்பாதையை உருவாக்கி, மாற்றுத் திறனாளி​களின் முன்னேற்​றத்தை முன்னெடுத்​துச் செல்ல திட்​டங்களை வகுத்து வருகிறோம்.

இந்த வளர்ச்​சிக்கு தன்னார்வ தொண்டு நிறு​வனங்​களின் பங்கும் அவசி​ய​மாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுற்றுச்​சூழல் தினத்​தையொட்டி தொடங்​கப்​பட்ட ‘அம்​மா​வின் பெயரில் ஒருமரம்’ என்ற திட்​டத்தை முன்னிலைப்​படுத்தி முட்டுக்​காடு தேசிய நிறுவன வளாகத்​தில் மரக்​கன்​றுகளை குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி மருத்​துவர் சுதேஷ் தன்கர் ஆகியோர் நட்டனர்.

இந்நிகழ்​வில் மாநிலங்​களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.லட்​சுமணன், தேசிய ​மாற்றுத் திறனாளி​கள் மேம்​பாட்டு நிறுவனத்​தின் இயக்​குநர் ந​சிகேத ர​வுத், துணைப் ப​திவாளர் பி.​காமராஜ், வித்​யாசாகர்​ நிறு​வனத்​தின்​ இயக்​குநர்​ பூனம்​ நட​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT