தமிழகம்

கொடிக்கம்பங்கள் குறித்த தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கோரிக்கை

செய்திப்பிரிவு

பொது இடங்​களில் அரசியல் கட்சிகளின் கொடிக்​கம்​பங்கள் வைக்கக் கூடாது என்ற தீர்ப்பை உயர் நீதி​மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, கட்சி​யின் மாநில செயலாளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் மதுரை கிளை கடந்த மாதம் 27-ம் தேதி​யன்று அரசியல் கட்சிகளின் கொடிக்​கம்​பங்கள் குறித்து வழங்​கி​யுள்ள தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்​தின் அடிப்படை உரிமை​யை​யும், ஜனநாயகத்​தை​யும் மறுப்​ப​தாகும். நீதித்​துறை​யின் அத்து​மீறலும் ஆகும்.

அரசியல் கட்சிகளின் கொடிக்​கம்​பங்​களோ, விளம்பர பலகைகளோ பொது​மக்​களுக்கு இடையூறாக இருக்​கும் பட்சத்​தில் அவற்றை ஒழுங்​குபடுத்து​வதற்கு நிர்வாக ரீதியான பல்வேறு கட்டுப்​பாடுகள் தற்போது அமலில்இருக்​கின்றன. அவை முறையாக அமல்​படுத்து​வதற்​கும், தேவையான கட்டுப்​பாடுகளை விதிக்கவும் ஆணை பிறப்​பிப்பிக்கலாம்.

ஆனால், ஒட்டுமொத்​தமாக பொது இடங்​களில் எங்குமே கொடிக்​கம்​பங்கள் வைக்கக் கூடாது என்பது அரசமைப்பு சட்டத்​தின் அடிப்படை உரிமைகளை மீறு​வ​தாகும். ஒரு தனியார் இடத்​தில் கொடிக்​கம்பத்​துக்கு மட்டும் நிர்வாக அனுமதி பெற வேண்டு​மென்பது ஜனநாயகம் குறித்த சகிப்புத் தன்மையற்ற சிந்​தனை​யாகும்.

எனவே, உயர் நீதி​மன்றம்வழங்கிய கொடிக்​கம்​பங்களைஅகற்றும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்​டும். தமிழக அரசு இந்த தீர்ப்​புக்கு எதிராக மேல்​முறை​யீடு செய்ய வேண்​டும் என ​மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வலி​யுறுத்து​கிறது. இவ்​வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT