தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தலில் நாதக கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்​தில் பு​கழேந்தி மனு

செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தலில் கலவரத்தை ஏற்படுத்​தும் வகையில் நாம் தமிழர் கட்சி​யினர் பேசி வருவ​தால், அக்கட்சி​யின் அங்கீ​காரத்தை ரத்து செய்து, கட்சியை தடை செய்ய வேண்​டும் என்று புதுடெல்​லி​யில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்​தில் பெங்​களூரு வா.பு​கழேந்தி நேற்று மனு அளித்​துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில் நாம் தமிழர் கட்சி​யின் சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பொதுக் கூட்​டங்​களில் பேசும்​போது, கடுமையான மோசமான வார்த்​தைகளை பயன்​படுத்து​வது, பெரி​யார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்​சைப்​படுத்தி பேசுவது மற்றும் மதம், சாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்​சித்து வருவது போன்ற செயல்​களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரை போலவே இவரது கட்சி​யின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முரு​கன், பிரச்சார மேடையை பயன்​படுத்தி காலணியை தூக்கி பொது​மக்​களிடம் காண்​பிக்​கிறார். அசிங்​கமான வார்த்​தைகளை பயன்​படுத்தி பேசி வருகிறார். இவருடைய நடவடிக்கைகள் அனைத்​தும் பெரியதொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்​சிப்​ப​தாகும். அமைதியான முறை​யில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்ட விதி​களுக்கு எதிராக செயல்​பட்டு வரு​கிறார். ஆகவே நாம் தமிழர் கட்​சி​யின் அங்​கீ​காரத்தை ரத்து செய்து, தடை செய்ய வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT