தமிழகம்

அமித் ஷாவுக்கு கருப்புகொடி காட்ட காங்கிரஸ் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு இன்று (ஜனவரி 31) வருவதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி உரையாற்றிய போது, அம்பேத்கரை மிக இழிவாகப் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளையும் கூறியிருந்தார்.

அம்பேத்கருக்கு பெருமை சேர்ப்பது அவர் உருவாக்கிய அரசமைப்பு சட்டம்தானே தவிர, அரசியல் ஆதாயத்துடன் பிரதமர் மோடி அமைக்கும் எந்த நினைவுச் சின்னங்களும் அல்ல. இதற்கிடையே மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று(ஜனவரி 31) மாலை சென்னை வருகிறார்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும். இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதுடன், ‘அமித்ஷாவே திரும்பிப் போ’ எனும் முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் இந்த போராட்டம் அமைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT