காந்தியடிகளின் நினைவு தினத்தை ஒட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு | 
தமிழகம்

மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினம் அனுசரிப்பு: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் 2 நிமிடம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை 11 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தலைமைச்செயலக கட்டிடம் பின்புறம் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், முதல்வர் ஸ்டாலின், காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின், அவர் உறுதிமொழியை படிக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலர்கள் என அனைவரும் திரும்ப படித்து தீண்டாமை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT