கோவை: போதை பொருட்களின் கிடங்காக கோவை மாறி வருகிறது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை உக்கடம் பகுதியில் பைசல், நிரஞ்சன் ஆகியோர் போதை மாத்திரை விற்பனை செய்த போது பிடிபட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் 5,000 டாஸ்மாக் கடைகள் 3,000 பார்கள் மூலமாக தமிழகம் சாராய போதையில் சதுராடுகிறது. மக்கள் தள்ளாடுகிறார்கள் இந்நிலையில் கோவையில் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ள செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருட்களின் கிடங்காக கோவை மாறி வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் போதை பொருட்களை உபயோகிக்காதீர்கள் என்று ஏதோ கனவுலகத்தில் இருந்து கொண்டு விளம்பரத்தில் பிரச்சாரம் செய்கிறார். தமிழக அரசு உடனடியாக போதைப் பொருட்கள் தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.