திருப்பரங்குன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப். 2-ல் கையெழுத்து இயக்கம்: மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு தொடர்பாக பிப். 2-ம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.முருகப்பெருமான் அருள் பாலிக்கும் சைவ மலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்.

தற்போது சைவக் கடவுளான முருகப் பெருமானை அவமதிக்கும் வகையிலும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் வேண்டும் என்றே திட்டமிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடுவதற்கும், மலைக்கு அசைவு உணவு கொண்டு செல்லும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்னர்.

இதற்கு தடை விதிக்கவும், திருப்பரங்குன்றம் மலையை அபகரித்து, ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை தடுக்கக் கோரியும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது மதுரை மாவட்ட அரசு நிர்வாகம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 2-ம் தேதி திருப்பரங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும், வணிகர்களிடமும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் ஒப்படைக்கும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT