தமிழகம்

போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில் போர் நினைவுச் சின்னத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை, காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல், தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் கரன்பீர் சிங்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி இந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சத்தீஷ் ஷெனாய், கிழக்குப் பிராந்திய இந்தியக் கடலோர காவல்படை ஐஜி தத்விந்தர் சிங் சைனி, தாம்பரம் இந்திய விமானப் படை தளத்தின் கமாண்டர் ஏர் கமோடோர் ரத்தீஷ் குமார் சார்பில் விங் கமாண்டர் கல்யாண் ராமன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இவை தவிர, முப்படைகளை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT