ஜகபர் அலி | கோப்புப்படம் 
தமிழகம்

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றியச் செயலாளருமான ஜகபர் அலி (56), சட்ட விரோத கல்குவாரி மீது நடவடிக்கை கோரி புகார் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அவர் லாரி மோதி உயிரிழந்தார். விசாரணையில், துளையானூரில் கல்குவாரி நடத்தி வந்த ராசு (54), ராமையா, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், ஓட்டுநர் காசிநாதன்(45) ஆகியோர் சதித்திட்டம் தீட்டி, ஜகபர் அலியைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, ராமையாவைத் தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ராமையாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜபகர் அலி கொலைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததுடன், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு வலியுறுத்தினர். இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தமிழக அரசுக்கு அனுப்பினார். அதைப் பரிசீலித்த அரசு, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT