ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 
தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல் மனு தாக்கல் நிறைவு: திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 58 பேர் வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் நேற்று வேட்​புமனு தாக்கல் செய்​தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ல் வாக்​குப்​ப​திவு நடைபெற உள்ளது. அதிமுக, பாஜக, தேமு​திக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்​தலைப் புறக்​கணித்​துள்ளன. கடந்த 10-ம் தேதி வேட்​புமனு தாக்கல் தொடங்​கியது. 13-ம் தேதி வரை 9 சுயேச்சை வேட்​பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்​தனர்.

இந்நிலை​யில், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீதாலட்​சுமி, கட்சி நிர்​வாகி​களுடன் சூரம்​பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதி​யில் இருந்து நேற்று ஊர்வலமாக வந்து, வேட்​புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரி​யிருந்​தார். இதற்கு போலீ​ஸார் அனுமதி மறுத்த நிலை​யில், வேட்​பாளர் மட்டும் சிறிது தூரம் நடந்து வந்தார். பின்னர், கார் மூலம் மாநக​ராட்சி அலுவல​கத்​துக்கு வந்து, தேர்தல் நடத்​தும் அலுவலர் மணீஷிடம் வேட்​புமனு தாக்கல் செய்​தார்.

செய்தி​யாளர்​களிடம் சீதாலட்​சுமி கூறும்​போது, “ஊர்​வலத்​துக்கு அனுமதி மறுத்து​விட்​டனர். திமுக அரசின் அடக்​கு​முறையை மீறி, சீமான் தலைமை​யில் பிரச்​சாரம் மேற்​கொள்​வோம். வாக்​காளர்​களைச் சந்தித்து நீதி கேட்​போம். அவர்கள் எங்களை ஆதரித்து, திமுக​வுக்கு பாடம் புகட்டு​வர். எந்த சின்னத்​தில் போட்​டி​யிடு​கிறோம் என்று வரும் 20-ம் தேதி சீமான் அறிவிப்​பார்” என்றார்.

தொடர்ந்து, திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மார், கூட்​ட​ணி கட்சி​யினருடன் வந்து தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்​புமனு தாக்கல் செய்​தார். அந்தி​யூர் செல்​வ​ராஜ் எம்.பி., திமுக தலைமை செயற்​குழு உறுப்​பினர் குமாரசாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்​தில்​கு​மார், ஈவிகேஎஸ் இளங்​கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடன் இருந்​தனர்.

பின்னர் வி.சி.சந்​திரகு​மார் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது,“திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி போட்​டி​யிடு​கிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியை மக்கள் வழங்​கு​வர். ஈரோடு கிழக்கு தொகு​திக்கென தனிப்​பட்ட வாக்​குறுதி அளிக்க வேண்டிய அவசி​யமில்லை. பொய்களை மட்டுமே பேசி, அரசியல் கட்சிகளில் வியா​தியாக இருக்​கிறது நாம் தமிழர் கட்சி. அவர்​களோடு போட்​டி​யிடுவதை காலத்​தின் கொடுமையாக கருதுகிறேன்” என்றார்.

மனுக்கள் இன்று பரிசீலனை: ஈரோடு கிழக்கு தொகு​திக்கான வேட்​புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலை​யில், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் 56 சுயேச்சை வேட்​பாளர்கள் உட்பட மொத்தம் 58 வேட்​பாளர்கள் மனு தாக்கல் செய்​துள்ளனர். மனுக்​கள் மீதான பரிசீலனை இன்று நடக்​கிறது. வரும் 20-ம் தேதி மனுக்களை ​திரும்​பப் பெற கடைசி நாளாகும். அன்றே வேட்​பாளர் இறு​திப் பட்​டியல்​ வெளி​யாக உள்​ளது.

SCROLL FOR NEXT