விஜய் | கோப்புப்படம் 
தமிழகம்

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” - தவெக தலைவர் விஜய் உருக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்அதிசயம் ஆனார்” என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று (ஜன.17) எம்ஜிஆர் பற்றி தான் புகழ்ந்து பேசும் வீடியோவை வெளியிட்டு அவருக்கு புகழாரம் செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி. அந்த வீடியோவுடன், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT