மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (ஜன.15) காலை 7. 30 மணிக்கு தொடங்கியது. மூன்று சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 3 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக அமைச்சர் பி மூர்த்தி ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் உறுதிமொழி ஏற்றனர்.இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முதலில் பாலமேடு பொது மடத்து மகாலிங்க சுவாமி கோயில் காளை உள்பட 5 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து பிற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பாலமேடு காளீஸ்வரி, மதுரை மு.முருகலட்சுமி உள்ளிட்ட பெண்களும் தங்களது காளைகளை அவிழ்த்தனர்.
ஒவ்வொரு சுற்றிலும் 50 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை போட்டியில் பங்கேற்றுள்ளன. கால்நடைத் துறையினர் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அனுப்புகின்றனர். பாலமேடு காளீஸ்வரி, மதுரை மு.முருகலட்சுமி உள்ளிட்ட பெண்களும் தங்களது காளைகளை அவிழ்த்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி சுமார் 200 மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. மூன்றாம் சுற்றில் மட்டும் 100 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. இவற்றில் 22 மாடுகள் பிடிபட்டன. முதல் மூன்று சுற்றுகளில் இருந்து 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் சுற்றில் 6 மாடுகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த கமல்ராஜ், இரண்டாம் சுற்றில் 2 மாடுகளை அடக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி, மூன்றாம் சுற்றில் 2 மாடுகளை அடக்கிய மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மிராஷ் ஆகிய மூவரும் இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங்கா மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரவிந்த் சிவப்பிரசாத் ஆகியோர் தலைமையில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர
இதுவரை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 50 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.