காஞ்சிபுரம் யாத்ரி நிவாஸ் அருகே சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட வாகன நிறுத்தம் கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. 
தமிழகம்

காஞ்சியில் சுகாதாரமற்ற யாத்ரி நிவாஸ் வாகன நிறுத்தம் - ஆட்டோக்களின் வசூல் வேட்டை

இரா.ஜெயபிரகாஷ்

காஞ்​சிபுரத்​தில் யாத்ரி நிவாஸ் அருகே செயல்​படும் வாகன நிறுத்தம் சுகா​தா​ரமற்ற முறை​யில் செயல்​பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் காஞ்​சிபுரம் நகருக்​குள் நுழைவ​தால் ஏற்படும் போக்கு​வரத்து நெரிசலை குறைக்க சர்வதீர்த்த குளம் அருகே ஏகாம்​பரநாதர் கோயிலுக்கு சொந்​தமான இடத்​தில் வாகன நிறுத்தம் அமைக்​கப்​பட்​டது.

பக்தர்கள் தங்கும் விடு​தியான யாத்ரி நிவாஸ் மற்றும் அதனுடன் இணைந்து வாகன நிறுத்​தும் இடம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்​தி​விட்டு, அங்கிருந்து பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட உள்ளூர் வாகனங்கள் மூலம் காஞ்​சிபுரத்​தில் உள்ள கோயில்​களுக்கு, வணிக நிறு​வனங்​களுக்கு செல்ல வேண்​டும்.

இந்த வாகன நிறுத்​துக்கு வரும் பேருந்து போன்ற வாகனங்​களுக்கு ரூ.300 கட்ட​ண​மும், வேன் போன்ற சிறிய வாகனங்​களுக்கு ரூ.200 கட்ட​ண​மும் 6 மணி நேரத்​துக்கு ஒரு முறை வசூலிக்​கப்​படு​கிறது. இவை தவிர மோட்​டார் சைக்​கிளை நிறுத்த ரூ.10 கட்டணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

வெளி மாநில சுற்றுலா பயணிகள் பலர் வாகன நிறுத்​தத்​திலேயே சமையல் செய்து சாப்​பிடு​கின்​றனர். ஆனால் வாகன நிறுத்​தத்​தில் போதிய வசதிகள் இல்லை. குடிநீர் வசதி இல்லை. மீதம் மீறும் உணவுகளை கொட்டு​வதற்கு குப்​பைத் தொட்​டிகள் இல்லை. இதனால் உணவு கழிவுகள் வாகன நிறுத்​தத்​திலேயே பல்வேறு இடங்​களில் கொட்​டப்​படு​கின்றன. மேலும் கழிவறை​யில் இருந்து கழிவுநீர் வெளி​யேறி அந்தப் பகுதி முழு​வதும் துர்​நாற்றம் வீசுகிறது. அந்த தூர்​நாற்​றத்​திலேயே பக்தர்கள் உணவு சமைத்து சாப்​பிடும் அவல நிலை உள்ளது.

இந்த வாகன நிறுத்​தத்​துக்​குள் வந்து பக்தர்களை ஏற்றிச் செல்ல ஒரு ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.50 மட்டுமே கோயில் நிர்​வாகம் மூலம் கட்டணம் வசூலிக்​கப்​படு​கிறது. ரூ.50-ஐ மட்டுமே செலுத்​தும் ஆட்டோ ஓட்டுநர்​கள், அருகருகே உள்ள கோயில்களை சுற்றிக்​காட்டு​வதற்கு ஒரு நபருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்​கின்​றனர்.

இவ்வளவு தொகை கொடுத்​தா​லும், பக்தர்​களால் சிரமமின்றி பயணிக்க முடிவ​தில்லை. ஆட்டோ​வில், 10 பேர் வரை ஏற்றுகின்​றனர். சுமார் 3 கி.மீ தூரத்​தில் உள்ள கோயில்களை சுற்றிக் காட்​டி​விட்டு ஒரு முறை செல்​லும் சவாரிக்கு ரூ.1500 முதல் 2000 வரை வசூலிக்​கின்​றனர்.

இதனால் பல பக்தர்கள் தங்கள் மாநிலங்​களில் இருந்து வருவதற்கு எவ்வளவு செலவு ஆகிறதோ அதைவிட அதிக தொகையை காஞ்​சிபுரத்​தில் சுற்றிபார்க்க செலவு செய்வதாக புகார் தெரிவிக்​கின்​றனர். பக்தர்​களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் குறிப்​பிட்ட நபர்​களுக்கு மேல் ஆட்டோக்​களில் ஏற்றிச் செல்வதை தடுக்க போக்கு​வரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதேபோல் ஆட்டோக்​களுக்கு கட்டணம் நிர்ணம் செய்ய வேண்​டும். மீட்டர் பொறுத்​தப்​பட்ட ஆட்டோக்கள் மட்டுமே வாகன நிறுத்​தமிடத்​தில் சுற்றுலா பயணிகளை ஏற்று​வதற்கு அனும​திக்க வேண்​டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்து​கின்​றனர்.

இதுகுறித்து தாமரை ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் கே.ஆர்​.வெங்​கடேஷிடம் கேட்​ட​போது, “எங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நபருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்​கின்​றனர். அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்று​வ​தில்லை. இந்த ரூ.100 கட்ட​ணத்​தில் ஏகாம்​பரநாதர் கோயில், உளகலந்த பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில் ஆகிய 4 கோயில்களை சுற்றிக் காட்டிவிட்டு மறுபடி அவர் வாகன நிறுத்தம் இடத்துக்கே கொண்டு வந்துவிட்டு விடுகின்றனர். சில கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் காத்திருந்து அவர்களை அழைத்து வர வேண்டும்.

இதற்கு சில மணி நேரங்கள்கூட ஆகும். இதற்கு இந்த கட்டணம் நியாயமானதுதான். ரூ.100-க்கு மேல் கூடுதலாக வசூலிக்க முடியாது. வரும் சுற்றுலா பயணிகளும் பேரம் பேசிதான் ஏறுகின்றனர். இந்த வாகன நிறுத்தத்தில் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT