தாம்பரம்: செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அருகே ரயில் சக்கரத்தில் இரும்பு பொருட்கள் சிக்கியதால் கொல்லம் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு மிக முக்கிய போக்குவரத்து ஆக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரப்பாக்கம் அருகே அதிகாலை சென்னை வந்து கொண்டிருந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், திடீரென சத்தம் கேட்டுள்ளது.
தண்டவாளத்தில் இருந்த இந்த சத்தம் வந்ததால் உடனடியாக ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அருகில் இருந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இரும்பு பொருள் சிக்கி இருந்ததால் இந்த சத்தம் ஏற்பட்டதாகவும் இரும்பு பொருள் அகற்றப்பட்டது.
அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதன் அடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்து அந்த இரும்பு பொருளை அகற்றினர். தொடர்ந்து அந்த பொருளை யார் வைத்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போது : பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் அந்த இடத்தில் இரும்பு பொருளை கவனக்குறைவாக பணியாளர்கள் விட்டு சென்றது தெரிய வந்தது.
நல்வாய்ப்பாக எந்தவித விபத்தும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் தாமதமாக கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி சென்றது. இதற்குப் பின் வந்த ரயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.