தமிழகம்

2024-ம் ஆண்டில் அரசு பணிக்கு 10,701 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டில் தமிழக அரசின் வெவ்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு செய்யப்பட்ட தாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 30 தேர்வுகளின் மூலம் 2024-ம் ஆண்டில் 10,701 பேர் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப் பட்டனர்.

தேர்வர்களின் நலன் கருதி குருப்-2ஏ மெயின் தேர்வு மற்றும் குருப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குருப்-2 தேர்வு மற்றும் தொழில் நுட்ப தேர்வுகளில் சம்பள ஏற்றமுறை 17 முதல் 20 வரையுள்ள பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு துறைகளின் தேவைக்கேற்பவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுகளில் 31 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

34 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை தேர்வர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக தேர்வாணை யத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT