தமிழகம்

பேராவூரணி அருகே காட்டாற்றில் கண்டெடுக்கப்பட்ட காலபைரவர் கற்சிலை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே மடத்திக்காடு கிராமத்தில் அக்கினி ஆறு தடுப்பணை உள்ளது. தடுப்பணை கரையை ஒட்டிய மணல் பகுதியில், விவசாயிகள் பனை விதைகளை நட்டு வைத்து, பனங்கிழங்குகள் பறிப்பது வழக்கம்.

இந்நிலையில், மடத்திக்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் நேற்று பனங்கிழங்குகள் பறித்துக் கொண்டிருந்தபோது, மண்ணில் ஒன்றரை அடி உயர கருங்கல்லால் ஆன காலபைரவர் சிலை கிடந்தது.

தகவலறிந்து வருவாய் ஆய்வாளர் புவனா, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோர் சென்று சிலையை வாங்கிச் சென்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்தச் சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டது.

SCROLL FOR NEXT