கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் பகுதியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் அமைச்சர்கள் மதிவேந் தன், செந்தில்பாலாஜி. அருகில் ஆட்சியர் மீ.தங்கவேல். 
தமிழகம்

விளிம்புநிலை மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்: அமைச்சர் மதிவேந்தன் உறுதி

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு தளவாபாளையம் பகுதியில் இன்று (டிச. 28ம் தேதி) பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் தலைமை வகித்து மனுக்களை பெற்று பேசியது: இங்கு பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குகள் தீர்வு காணப்படும். நான் இங்கு வந்ததன் நோக்கம். விளிம்பு நிலையில் உள்ள பட்டியலின மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். பட்டியலின மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

அடிப்படை வசதிகள், கோரிக்கைகள், தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றப்படும். ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி வாழவைக்க வேண்டும். அதற்காக கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு பாடுபடுவோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். நீங்கள் எங்களுடன் இ ருக்கவேண்டும். நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலை வகித்து பேசியது: இந்த அரசு மக்களுக்கான அரசு. மக்களுக்கான முதல்வர் ஆட்சியில் உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சிறு இன்னல்கள் என்றாலும் நேரில் சென்று பூர்த்தி செய்பவர்கள்தான் முதல்வரும், துணை முதல்வரும்.

இங்கு துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ரூ.2 கோடியில் 3 சமுதாயக்கூடங்கள் அமைக்கப்பட உள் ளன. மக்களை சந்தித்து அவர்களுக்கு என்னென்ன தேவைகளை கேட் டறிந்து நிறைவேற்ற பாடுபடுவோம். நிச்சயம் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை பெற்று ஒப்படைப்போம் என்றார்.

ஆட்சியர் மீ.தங்கவேல், எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குப்பம் காலனி, நஞ்சைக்காளக்குறிச்சி, ஆலமரத்துப்ப ட்டி காந்தி நகர், ஈசநத்தம் சுக்காம்பட்டி காலனி ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து அமைச்சர்கள் மனுக்கள் பெற்றனர்.

SCROLL FOR NEXT