மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் பணியாளர்கள் சம்மேளனத்தின் வெள்ளி விழா நடைபெற்றது. 
தமிழகம்

‘தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் திட்டத்தை கைவிடுக’- போக்குவரத்து சம்மேளனம் வலியுறுத்தல் 

கி.மகாராஜன்

மதுரை: அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் பணியாளர்கள் சம்மேளனம் இணைந்து வெள்ளி விழா மற்றும் அகில இந்திய ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. டிடிஆர்எஸ்எப் மாநிலத் தலைவர் எஸ். ஷாஜகான் தலைமை வகித்தார். சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் திருமலைசாமி, எஸ். நாகராஜன், ஏ.இராஜாஜி, பி.ராமசாமி, எஸ். சம்பத், ஏ.செண்பகம், எஸ்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல்துறையைச் சேர்ந்த கே.செல்வராஜ் மற்றும் அரசு ஓய்வூதியர் அமைப்பைச் சேர்ந்த ஆர்.மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 109 மாதங்களாக ஓய்வூதியர்களுக்கு நிலுவையிருக்கிற அகவிலைப்படி (டி ஏ)யை உடனடியாக வழங்க வேண்டும், பணியில் உள்ள பணியாளர்களின் நிலுவையிலுள்ள ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசித் தீர்க்க வேண்டும், தனியாரிடமிருந்து பேருந்து எடுத்து மேற்கொள்ளப்படும் ஒப்பந்த இயக்கங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை ஈடுகட்ட பட்ஜெட்டில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT