எழும்பூர்-திருமங்கலம் சுரங்க மெட்ரோ ரயில் பணிகள் 2015 டிசம்பரில் நிறைவடையும், என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழும்பூர்-திருமங்கலம் சுரங்க மெட்ரோ ரயில் பணிகள் 2015 டிசம்பரில் நிறைவடையும். மேலும் 45கிமீ தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் பணிகள் 2016 ஆகஸ்ட்டில் நிறைவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழும்பூர்-திருமங்கலம் இடையேயான சுரங்க மெட்ரோ ரயிலுக்கான 9.5 கிமீ சுரங்கப்பாதைக் கட்டுமானப்பணிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டிசம்பரில் முடிந்து விடும். “சுரங்கப்பாதை வேலைகளை இன்னும் 4 மாதங்களில் பூர்த்தி செய்து விடுவோம். அதன் பிறகு பாலமிடும் பணிகள், மின்மயமாக்கப் பணிகள் நடைபெறும். இது 2015 டிசம்பரில் முடிவடையும், சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுதும் 2016 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரு பூங்கா முதல் எழும்பூர் வரையில் 948 மீட்டர்களுக்கு இரண்டு எந்திரங்கள் சுரங்கப்பாதை அமைக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதே போல் பல்வேறு இடங்களிலும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 2015-ல் முடியவேண்டும், ஆனால் பல்வேறு காரணங்களினால் ஓராண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் மொத்தம் 32 ரயில் நிலையங்களில் 19 ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் இயங்கும். ஒரு கிமீ சுரங்கம் அமைக்க ரூ.300 கோடியும், ஒரு சுரங்க ரயில் நிலையம் அமைக்க ரூ.100 கோடியும் செலவாகி வருகிறது என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.