தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: நாளை எங்கெல்லாம் கனமழை?

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (டிச.16) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும். இதன் காரணமாக நாளை (டிச.17) கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT