வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 2 கோடியே 85 லட்சத்துக்கான  காசோலையை   மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் வாங்கினார் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி  
தமிழகம்

தேசிய மக்கள் நீதிமன்றம்: மதுரையில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2.85 கோடி இழப்பீடு

கி.மகாராஜன்

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் ரூ.2.85 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று (டிச.14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வாழக்கு என பல்வேறு வாழக்குகள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2 கோடியே 85 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் வழங்கினார். மாவட்ட நீதிபதி நாகராஜன், தலைமை குற்றவியல் நீதிபதி ராமலிங்கம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சரவணன் செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT