தமிழகம்

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை

இரா.நாகராஜன்

பொன்னேரி: பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் சிக்கியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட ஆய்வு அலுவலர் தலைமையில், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபடத் தொடங்கினர். இரவு 8 மணிவரை நீடித்த இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.79,100 -ஐ லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT