தமிழகம்

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் ஆர்.என்​.ரவி 2 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி புறப்​பட்டுச் சென்​றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வி​யின் பதவிக்​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடர்​வார்.

இந்நிலை​யில், ஆளுநர் ரவி, நேற்று டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாது​காப்பு அலுவலர்கள் சென்​றுள்​ளனர். ஆளுநர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்​ஷாவை சந்திக்க வாய்ப்​பிருப்​பதாக கூறப்​படு​கிறது.

ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதிகாரப்​பூர்வ தகவல் எதையும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடவில்லை. அவர் தனது டெல்லி பயணத்தை முடித்து​விட்டு இன்று இரவு மீண்​டும் சென்னை ​திரும்​பு​கிறார்.

SCROLL FOR NEXT