தமிழகம்

பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகருக்கு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர், கழிவுநீர் கலந்து நிறம் மாறி இருந்ததாகவும், இதை அருந்திய அப்பகுதி மக்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திமுக அரசின் மெத்தனப்போக்கே 2 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என்ற நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT