தமிழகம்

மதுரையில் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைப்பு: போலீஸ் விசாரணை

கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகம் அருகே கடந்த வருடம் ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றினார். கொடி கம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் நினைவாக கல்வெட்டும் அமைக்கப்பட்டது.

நேற்று இரவு திடீரென மர்ம நபர்களால் கல்வெட்டு உடைக்கப்பட்டு கொடிகள் அகற்றப்பட்டு இருந்தது. இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT