தமிழகம்

பின்னுக்குத் தள்ளப்பட்ட பிடிஆர்... முன்னுக்கு வந்த மூர்த்தி! - மு.க.அழகிரி கோட்டையில் முஷ்டி தூக்கும் கோஷ்டிகள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தென் மாவட்ட திமுகவே மு.க.அழகிரியின் கண்ணசைவில் சுழன்றது. இப்போது அழகிரி ஆக்டீவ் அரசியலில் இல்லாததால் குருநில மன்னர்கள் நிறையப் பேர் கோலோச்சுகிறார்கள். அந்த வகையில், மதுரை திமுகவின் அடுத்த தலைமுறை அதிகார மையங்களாக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

​பாரம்​பரிய அரசியல் குடும்பத்​தில் இருந்து வந்தவர் என்ப​தா​லும் முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கம் என்ப​தா​லும் எடுத்த எடுப்​பிலேயே திமுக அமைச்​சர​வை​யில் நிதி​யமைச்சர் அந்தஸ்​தில் அமரவைக்​கப்​பட்​டார் பி.டி.ஆர்​.பழனிவேல் தியாக​ராஜன்.

கூடவே, திமுக ஐடி விங்க் செயலா​ள​ராக​வும் அங்கீகரிக்​கப்​பட்​டார். கொடுத்த பொறுப்​பில் திறம்​படவே செயல்​பட்ட பிடிஆர், தமிழக அரசின் நிதி நிர்​வாகத்​தில் பல்வேறு சீர்​திருத்த நடவடிக்கைகளை மேற்​கொண்​டார். அதற்காக முதல்​வரின் பாராட்டுகளை குவித்​தார். விளை​வாக, உள்ளாட்​சித் தேர்​தலில் பிடிஆ​ரால் கைகாட்​டப்​பட்ட இந்தி​ராணியை மதுரைக்கு மேயராக்​கியது தலைமை.

இப்படி கட்சி​யிலும் ஆட்சி​யிலும் ஏறுமுகத்​தில் பிடிஆர் இருந்த சமயத்​தில் 2022-ல் உட்கட்​சித் தேர்தல் வந்தது. அப்போது உள்ளூர் அரசி​யலிலும் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க நினைத்​தார் பிடிஆர். அங்கு​தான் அவருக்கு சிக்கல் ஆரம்ப​மானது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை திமுக​வினர், “பழனிவேல் தியாக​ராஜன், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அதலை செந்​தில் என்பவரை களமிறக்​கி​னார். இவரை எதிர்த்து, தளபதி எம்எல்​ஏ-வை அமைச்சர் பி.மூர்த்தி கொம்​பு சீவி​னார். பிடிஆரின் செல்​வாக்கை சரிக்க இந்தத் தேர்தலை ஒரு ஆட்டக்களமாக பயன்​படுத்த நினைத்த அமைச்சர் பி.மூர்த்தி, தளபதி, மணிமாறன், ஜெயராமன் உள்ளிட்ட மதுரை திமுக முக்கிய நிர்​வாகிகள் ஓரணி​யில் திரண்​டனர்.

தங்களது ஆட்களை ஜெயிக்க வைக்க இரு தரப்புமே ஆட்களை எல்லாம் கடத்​தி​வைத்​தது. அரசு நிர்​வாகத்​தில் பிடிஆரின் கட் அண்ட் ரைட் பிடிக்காத மூத்த அமைச்​சர்கள் சிலர் மூர்த்தி அண்ட் கோ-வுக்கு ஆதரவுக்​கரம் நீட்​டி​னார்​கள். ஆனால், தேர்தல் நடந்​தால் வெட்டுக் குத்து வரை போகலாம் எனச் சொல்​லப்​பட்​ட​தால் இருதரப்​பை​யும் அழைத்து சமாதானம் செய்தது தலைமை.

கடைசி​யில், தளபதி மாநகர் மாவட்டச் செயலா​ளராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார். இதனால் விரக்​தி​யடைந்த பிடிஆர், தளபதி​யை​யும், அமைச்சர் பி.மூர்த்தி​யை​யும் திமுக நிர்​வாகிகள் கூட்​டத்​தில் மறைமுகமாக தாக்​கினார். இதையடுத்து, தலைமை மீண்​டும் இருதரப்​பை​யும் அழைத்​துப் பேசி அடக்கி வாசிக்க வைத்​தது.

இந்த நிலை​யில் முதல்வர் குடும்பம் தொடர்பாக பிடிஆர் பேசி​யதாக சமூக வலைதளங்​களில் ஆடியோ ஒன்று வெளி​யாகி வைரலானது. இதைப் பிடித்​துக்​கொண்டு பாஜக உள்ளிட்ட எதிர்க்​கட்​சிகள் திமுக அரசுக்கு எதிராக பிலுபிலுத்தன. அந்த ஆடியோ தொடர்பாக பிடிஆர் மறுப்பு தெரி​வித்து விளக்​கமளித்த பிறகும் சர்ச்சை ஓயாத நிலை​யில் திடீரென அவரிட​மிருந்து நிதித்​துறை பறிக்​கப்​பட்டு தகவல் தொழில்​நுட்பத் துறைக்கு அமைச்​ச​ராக்​கப்​பட்​டார்.

இப்படி அடுத்​தடுத்து தனக்கு அடிகள் விழுந்​த​தால் மதுரை மாநக​ராட்சி மற்றும் மாநகர திமுக விவகாரங்​களில் தலையிடுவதை பிடிஆர் அறவே நிறுத்​திக் கொண்​டார். அத்துடன் திமுக ஐடி விங்க் செயலாளர் பதவியை​யும் துறந்​தார். இப்போது அரசு விழாக்​கள், நிகழ்ச்​சிகளில் மட்டுமே பிடிஆரின் தலையைப் பார்க்க முடிகிறது. அரசியல் நடவடிக்கை​களில் ஆர்வம் காட்​டாமல் அமைதி​காக்​கிறார் பிடிஆர். இந்த வாய்ப்​பைப் பயன்​படுத்தி அமைச்சர் பி.மூர்த்தி, முதல்​வர், துணை முதல்வரை மிக நெருங்கி​விட்​டார்” என்றனர்.

பிடிஆர் ஆதரவாளர்​களோ, “தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றி வரும் பிடிஆர், தனது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்​குறு​திகளை நிறைவேற்றும் முனைப்​பில் இருக்​கிறார். தொகுதி மக்களுக்​காக, தான் சாதித்​தவற்றை புத்​தகமாக வெளி​யிட்​டுள்ள அவர், அதை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகிறார். தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​ச​ராக​வும் முதலமைச்சர் பாராட்டும் வகையில் தனது செயல்​பாடுகளை திட்​ட​மிட்டு வருகிறார்” என்றனர்.

ஆக, பி.டி.ஆர்​.பழனிவேல்​ராஜன் இருந்த​போது ​மு.க.அழகிரியை எ​திர்த்து மதுரைக்​குள் அரசி​யல் நடத்​தி​னார். இப்​போது அவரது பிள்ளை பழனிவேல் ​தி​யாக​ராஜன் அழகிரி​யின் ​முன்​னாள் சிஷ்யகோடிகளை எ​திர்த்து அரசி​யல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்​ளப்​பட்​டிருக்​கிறார்​!

SCROLL FOR NEXT