புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் இன்று (நவ.29) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். கறம்பக்குடி தாலுகா கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். சகோதரர்களான இருவரும் அதிமுகவில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மாவட்டப் பொருளாளராக உள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர்கள்.
இந்நிலையில், இவர்களது வீடு மற்றும் ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு பழனிவேல் ஆகிய 3 பேரின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் அமலாக்கத் துறையினர் இன்று காலையில் இருந்து அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றர்.