தமிழகம்

இயல், இசை, நாடக மன்ற தலைவராக தேவா மீண்டும் நியமனம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக இசையமைப்பாளர் தேவா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக உள்ள தேவாவின் பதவிக்காலம் முடிவடைவதால், மீண்டும் அவரே தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தேவா இந்தப் பதவியை வகிப்பார். மேலும் இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் – செயலாளராக சித்ரா விஸ்வேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார்.

தன்னை மீண்டும் தலைவராக நியமனம் செய்திருப்பது பற்றி ‘தி இந்து’விடம் இசையமைப்பாளர் தேவா கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் நலிவடைந்த கிராமிய கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டம் உள்பட பல நல்ல திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். இந்நிலையில், மீண்டும் என்னை தலைவராக நியமனம் செய்திருப்பது, மன்றத்தின் செயல்பாடு களில் மேலும் அதிக உற்சாகத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

இதற்காக முதல்வர் ஜெயலலிதா வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேவா கூறினார்.

SCROLL FOR NEXT