படம்: எல்.பாலசந்தர் 
தமிழகம்

புயல் உருவாக 12 மணி நேரம் தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற 12 மணி நேரம் ஆகும். அது, வரும் 30-ம் தேதி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் - புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு நோக்கி 3 கி.மீ வேகத்தில் நகர்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம் ஆகும். வரும் 30-ம் தேதி இந்தப் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் - புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT