குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகை வருகையை ஒட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் ஒத்திகை நடைபெற்றது. 
தமிழகம்

குடியரசுத் தலைவர் உதகை வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் ஒத்திகை

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் உதகை வருவதை ஒட்டி உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 27 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் வருகிறார். கோவை விமான தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்தடையும் குடியரசுத் தலைவர் உதகை ராஜ்பவனில் தங்குகிறார். 28-ம் தேதி சாலை மார்க்கமாக குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் உதகை வருவதை ஒட்டி உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இன்று 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்தவாறு இறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன், டிஎஸ்பி யசோதா தலைமையில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT