தமிழகம்

விசிக சார்பு அணிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

விசிக சார்பு அணிகளின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: விசிகவில் அமைப்பு ரீதியாக 144 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தை மறுசீரமைக்கும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, விரைவில் 234 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக்குழுவினர் பெற்று வருகின்றனர். இத்துடன் மாவட்ட பொறுப்புகள், மாநில பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்படுகிறது.

மேலும், சார்பு அணிகளையும் மறுசீரமைக்கும் வகையில் கூடுதலாக சிலவற்றை சேர்த்து இறுதியான அணிகள் பட்டியல் வெளியிடப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி, அவர் வெளியிட்ட அறிவிப்பில், அணிகளின் எண்ணிக்கை 27-ல் இருந்து 32ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மீனவர் மேம்பாட்டு பேராயம், மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம், தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான பொறுப்பாளர்களும் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT