தமிழகம்

வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ வழங்கினால் வரவேற்போம்: ஞானதேசிகன்

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா விருது’ வழங்கினால் அதை வரவேற்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

அன்னை தெரசாவின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா சென்னை வள் ளுவர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ் ஞானதேசிகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளையும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங் கினார்.

இந்நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் முன்னாள் முதல் வர் பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தால் மகிழ்ச்சி யடைவோம்.

அதேபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப் படவுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பாரத ரத்னா கொடுத்தால் அதையும் வரவேற்போம்.

பாஜகவினர் மீனவர்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போதும் தமிழக அரசின் ஒத்துழைப்போடு 2 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ஆனால், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே அவர்களைப் போல நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம்.

ஐநா மன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சவை பேச அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. ஐநா சபையில் ஒருவரை பேச அனுமதிக்கவோ, அனுமதிக்கக் கூடாது என்று சொல்லவோ இந்தியாவால் முடியாது. ஏனென்றால் அது பல நாடுகள் சேர்ந்த ஒரு சபை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT